top of page
மாதவராஜ்



கரிசல் குயில் - நமது மண்ணின் குரல்!
‘மண்ணெண்ணெய் விளக்கினில் பாட்டெழுதி இந்த மண்ணுக்கு கொண்டு வந்தேன்’ என்று மக்கள் கூட்டங்களை ஆரம்பித்து வைத்த குரல் அவருடையது. “உடலில் ஊறி வரும் உதிரம் முழுவதும் என் விழியில் ஊறி வரும் தோழா” என அடி வயிற்றிலிருந்து கேவலை வெளிப்படுத்திய குரல் அவருடையது. ”எங்களைத் தெரியலையா, எங்கள் இசையைப் புரியலையா?’ என நெஞ்சை நிமிர வைத்த குரல் அவருடையது. “தோழர்களே, தோழர்களே, தூக்கம் நமக்கில்லை தோழர்களே!” என நாடி நரம்பெல்லாம் துடிக்கச் செய்த குரல் அவருடையது. எளிய மக்களுக்கு நெருக்கமான மண்ணின் க
May 74 min read


இங்கிருந்துதான் வந்தான் - 3
எழுபத்து நான்கு வயதுக்குள் சுப்புத்தாய் நிறைய ’ஓடிப்போனவர்களை’ பார்த்திருந்தார். கிளுகிளுப்பாகவும், சுவாரசியமாகவும் சில நேரங்களில் அதிர்ச்சியாகவும் இருந்த பேச்சுக்கள் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டிருந்தன. தீப்பெட்டி ஆபிஸில், தெருவில், சொந்தங்களில் என்று விதம் விதமாக கதைகளை பார்த்தும் கேட்டும் இருந்தார். நினைவுகளில் இருந்து நிறைய உதிர்ந்தும் கூட போய் விட்டிருந்தன. தன் வீட்டில் அவை நிகழ்ந்தபோது கொஞ்ச நாள் முறுக்கிக் கொண்டு நின்ற மனிதர்கள் மீண்டும் பழையபடி ஆனதையும் பார்த்திருந்
May 19 min read


இங்கிருந்துதான் வந்தான் - 2
உட்காரச் சொன்னார். தரையில் உட்கார்ந்தான். ஒன்றும் புரியாமல் முதலாளியைப் பார்த்தான். உள்ளே சென்று சாப்பாட்டுத் தட்டைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தார். “முதலாளி நா மேலேயே சாப்பிட்டுக்கிறேன்” எழுந்தான். ”அட உக்காருப்பா” என்றவர் கொஞ்சம் தள்ளி மேஜையில் இருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை எடுத்துத் திறந்தார். முத்தையாவுக்கு கைகால்கள் எல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தன. அவன் முன் இருந்த தட்டிலில் அப்படியே தலைகீழாய் கொட்டினார். அவன் முகம் பார்த்து, ”ம்… ஆசை தீரச் சாப்பிடு” என்றார்.
May 19 min read


இங்கிருந்துதான் வந்தான் - 1
தன் வாழ்வில் சந்தித்த மேடுகளும் பள்ளங்களும், இருட்டும் வெளிச்சமும் அப்படியே யாருக்கும் வாய்க்காது எனத் தோன்றியது. அவனுக்கே சில நேரங்களில் அதிசயம் போலத் தோன்றும். வடமலைக்குறிச்சி பழனி ஒயின்ஸில் சரக்கு அடித்து விட்டு நட்ட நடு ராத்திரியில் மூப்பர் சமாதி மேல் உட்கார்ந்து சுருட்டு புகைத்துக் கொண்டு குறி சொன்ன அந்த சின்ன முத்தையா இந்த பெரிய முத்தையா எப்படி இருப்பான் என்று அறிந்திருந்தானா?
Apr 307 min read


எழுத அவரிடம் நிறைய இருந்தன
எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி பெ ட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்திற்கு வெளி பூராவும் ஈசல்கள் அங்குமிங்கும் அலைக்கழிந்து பறந்து கிடந்த 2005...
Apr 278 min read


நீ யார்? - 2
எது உண்மையோ அதை எழுதியிருந்தார். பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந்த நேர்மை மிக முக்கியமானது. உண்மைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டால், இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நீதி கிடைக்கும் வாய்ப்புண்டு. உண்மைகள் பதிவு செய்யப்படாமல் போகும்போது நீதி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடும்.
Mar 314 min read


நீ யார்? - 1
தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவதற்கு வெறி கொண்டிருந்த
ஒரு நிர்வாகத்தைப் பற்றிய கதை இது.
தொழிற்சங்கத் தலைமை ஏற்ற ஒரு இளம் தலைமுறையை நசுக்க முயன்ற கதை.
ஒழுங்கு நடவடிக்கை என்னும் பெயரில் அடுக்கப்பட்ட பொய்களின் தோலை உரிக்கும் கதை. தொழிற்சங்கத்தின் முன்னே நிர்வாகம் தோற்ற கதை.
உண்மைக் கதை.
எனது கதையும் கூட.
Mar 303 min read


இது வேறு இதிகாசம்
காமிரா கோணம், இடம், வெளிச்சம், வசனம், தூரம், பொழுது, பாத்திரங்கள், அவர்களுக்கான நடை உடை பாவனைகள் என எல்லாம் முன்னரே திட்டமிடப்பட்டு, மாறி மாறி ஒத்திகை பார்க்கப்பட்டு எடுக்கப்படுகிற கதைப்படங்களின் காட்சிகள் குறித்து விரிவாக பேசமுடிகிற, பேசப்படுகிற காலம் இது. ஆவணப்படங்களில் ஒருக் குறிப்பிட்ட காட்சியை அந்த நேரத்தில் தவறவிட்டால் வேறு எப்போதும் எடுக்கவே முடியாது. ஒருக் குறிப்பிட்ட வார்த்தையில் கிடைக்கும் உயிர்த் துடிப்பான அர்த்தங்களையும் தொனியையும் அந்த நேரத்தில் தவறவிட்டால் மீண்ட
Mar 289 min read
bottom of page