top of page
மாதவராஜ்



நீ யார்? - 8
எப்படியாவது காரியம் சாதித்தால் போதும் என கொள்கையற்ற தலைவர்களை நிர்வாகத்துக்கு எப்போதுமே பிடிக்கும். அவர்கள் மீது மோசமான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் நிர்வாகம் கண்டு கொள்ளாது. நம்மைப் போன்ற போர்க்குணமிக்க சங்கங்களின் வளர்ச்சியைத் தடுக்க அந்த சங்கத்தை பயன்படுத்தும். அவர்களும் அதில் குளிர் காய்வார்கள்.
Apr 105 min read


நீ யார்? -7
தற்காலிக ஊழியர்களுக்கு இந்த வாழ்க்கை கொடுமையானதாகவும், நரகமாகவும் இருக்கிறது. வாழ்வில் என்றேனும் ஒரு நல்ல நாள் வருமென எல்லாரையும் போல் அவர்கள் காத்திருக்கிறார்கள். யோசித்துப் பார்க்கும்போது உலகில் எல்லோருமே தங்களுக்கு ஒரு நாள் நீதி கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பது போலவே தெரிந்தது.
Apr 94 min read


நீ யார் - 6
ஆஸ்பத்திரியில் மனிதர்கள் கசங்கிப் போய் நிறைந்திருந்தார்கள். எல்லோரும் முகக் கவசம் மாட்டிக் கொண்டு இருந்தார்கள். மனிதர்களின் கண்கள் கதிகலங்கிப் போயிருந்தன. நர்ஸ்களும், டாக்டர்களும் உடல் முழுக்க பிளாஸ்டிக் கவுன் மாதிரி ஒன்று மாட்டிக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்கள். யாரிடமும் புன்னகையைக் காண முடியவில்லை.
Apr 84 min read


நீ யார்? - 5
கிளைகளில் உள்ள பணம் , நகைகள் வைத்திருக்கும் பெட்டகத்தின் சாவிகளில் ஒன்றை ஆபிஸரும் இன்னொன்றை கேஷியரும் வைத்திருப்பதுதான் நடைமுறை. தேவையான ஆட்களை பணிக்கு எடுக்காததால், ஐந்து கிளைகளில் ஆபிஸர்களே கிளர்க்குகளின் வேலைகளை பார்க்க வேண்டி இருந்தது. ஒரே ஆபிஸரே பெட்டகத்தின் இரண்டு சாவிகளையும் கையாள வேண்டி இருந்தது. அதுமட்டுமல்ல, இல்லாத கேஷியருக்கு பொய்யாக ஒரு பாஸ்வேர்டு உருவாக்கி அதை ஆபிஸர்களே கம்ப்யூட்டரில் பயன்படுத்தி பண பரிவர்த்தனைகள் செய்ய நிர்வாகமே ஏற்பாடு செய்து கொடுத்தது.
Apr 64 min read


நீ யார்? - 4
அந்த நேரங்களில் எனது சிந்தனையிலும் துடிப்பிலும் இருந்தது ஒன்றே ஒன்றுதான். பணி ஓய்வு பெறுவதற்கு இருந்த எட்டு ஆண்டுகளுக்குள் சங்கத் தலைமைக்கு இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களை உருவாக்கி விட வேண்டும் என்பதுதான் அது. எனக்கு நானே விதித்துக் கொண்டது. இந்தக் காரியத்தில் எனக்கு உறுதுணையாக இருந்ததும், வழிகாட்டியதும் தோழர்கள் சி.பி.கிருஷ்ணன், தோழர் போஸ்பாண்டியன், சோமசுந்தரம் ஆகியோர்.
Apr 34 min read


நீ யார்? - 3
சங்கத்திற்குள் என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ள நிர்வாகம் மெனக்கெடுவதும், நிர்வாகம் என்ன செய்கிறது எனத் தெரிந்து கொள்ள சங்கத்தரப்பில் முயற்சிப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். நிர்வாகம் ஊழியர்களைத் தாக்குவதற்கும், சங்கம் ஊழியர்களை தற்காத்துக் கொள்வதற்கும் தகவல்களை சேகரிக்கின்றன. கிடைக்கும் சின்னச் சின்னத் தகவல்களில் இருந்து அடுத்து என்ன அசைவு என்பதை ஊகித்தறிய முடியும். அதற்கான வாய்ப்புகளைக் கொடுக்காமல் இருப்பது முக்கியமானது
Apr 24 min read


நீ யார்? - 2
எது உண்மையோ அதை எழுதியிருந்தார். பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந்த நேர்மை மிக முக்கியமானது. உண்மைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டால், இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நீதி கிடைக்கும் வாய்ப்புண்டு. உண்மைகள் பதிவு செய்யப்படாமல் போகும்போது நீதி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடும்.
Mar 314 min read


நீ யார்? - 1
தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவதற்கு வெறி கொண்டிருந்த
ஒரு நிர்வாகத்தைப் பற்றிய கதை இது.
தொழிற்சங்கத் தலைமை ஏற்ற ஒரு இளம் தலைமுறையை நசுக்க முயன்ற கதை.
ஒழுங்கு நடவடிக்கை என்னும் பெயரில் அடுக்கப்பட்ட பொய்களின் தோலை உரிக்கும் கதை. தொழிற்சங்கத்தின் முன்னே நிர்வாகம் தோற்ற கதை.
உண்மைக் கதை.
எனது கதையும் கூட.
Mar 303 min read
bottom of page