இராஜகுமாரன் - வெளியீடு
- மாதவராஜ்
- Mar 31
- 1 min read
Updated: May 3

எனது முதல் சிறுகதை தொகுப்பு ‘இராஜகுமாரன்’ 1995ம் ஆண்டு சாத்தூரில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கலை இலக்கிய இரவில் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் கந்தர்வன் வெளியிட, எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி பெற்றுக் கொண்டார்.
இராஜகுமாரன் சிறுகதை தொகுப்பை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டிருந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்னுரை எழுதியிருந்தார்.அந்த புத்தகத்திற்கும்m எனக்கும் கிடைத்த மிகப் பெரிய பேறு அது.
நிகழ்வில் எழுத்தாளர் கந்தர்வன் அவர்களும், எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்களும் பேசிய வீடியோ 2023ல் கிடைத்தது. நினைவுகளில் நிறைந்த தமிழின் முக்கிய எழுத்தாளர்களின் அசைவுகளையும், குரல்களையும் பார்க்கிறபோது தொலைதூரத்திகு சென்றிருந்த காலம் அருகே வந்தது. எவ்வளவு அழகாக, அருமையாக பேசியிருக்கிறார்கள்!
வாழ்வில் என்னை படம் பிடித்த முதல் வீடியோக் காட்சியும் இதுதான். வெட்கமும், தயக்கமும் கொண்ட சின்னப் பையனாய் என்னை நான் பார்த்துக் கொள்ள முடிந்தது.
இந்த நிகழ்வு எனக்கு காலம் அளித்த பொக்கிஷம்!
Comments