ரசிகன்
- மாதவராஜ்
- Apr 3
- 1 min read

அப்போது வெளிவந்த அந்த நடிகருடைய படத்தின் போஸ்டர் நகரின் முக்கிய வீதியில் ஒட்டப்பட்டு இருந்தது. யாரையோ ஆவேசமாக கைகளை நீட்டி எச்சரித்துக் கொண்டு இருந்தவரின் கண்களை யாரோ பிடுங்கி இருந்தார்கள்.
கலவரம் எதுவும் ஏற்படுமோ என அச்சமாய்த்தான் இருந்தது. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.
இப்போது வெளிவந்த இந்த நடிகருடைய படத்தின் போஸ்டர் அதே இடத்தில் ஒட்டப்பட்டு இருந்தது. இவரது ஆண்குறியை யாரோ பிடுங்கி இருந்தார்கள்.
Comments