அல்லாஹூ அக்பர்
- மாதவராஜ்
- Apr 2
- 1 min read

”அல்லாஹூ அக்பர்”
அவர்கள் பள்ளிக்கு வெளியே நிறுத்தப் பார்த்தாலும்
நான் பள்ளிக்குள் செல்வேன் என்று அர்த்தம்.
அவர்கள் கும்பலாக சேர்ந்து என்னை பயமுறுத்தும்போதும்
நான் பயப்பட மாட்டேன் என்று அர்த்தம்.
அவர்கள் கடவுளின் பெயரால் அநியாயம் செய்யும் போது
நான் கடவுளின் பெயரால் நியாயம் கேட்பேன் என்று அர்த்தம்.
அவர்களே பயங்கரவாதிகள், தீவீரவாதிகள்
நான் அல்ல என்று அர்த்தம்.
அவர்கள் வெறுப்பை உமிழும்போது
நான் அன்பை வேண்டுகிறேன் என அர்த்தம்.
அவர்கள் நிராதரவாக என்னை நிறுத்தும்போது
நான் என்னை ஆதரிக்கும் மனிதர்களை அழைக்கிறேன் என்று அர்த்தம்.
அவர்கள் என்னை வீழ்த்திட மூர்க்கத்தனம் கொண்டபோது
வாழ்ந்தாலும் சரி, வீழ்ந்தாலும் சரி, யுத்தம் செய்வேன் என அர்த்தம்.
அவள் தனியே இல்லை;
நாமெல்லாம் அவளோடு இருக்கிறோம் என்று அர்த்தம்
“அல்லாஹூ அக்பர்.”
Comments