சேகுவேரா புத்தக வெளியீடு
- மாதவராஜ்
- Apr 17
- 1 min read
Updated: May 3

2004ம் ஆண்டு டிசம்பர் 18ல் சாத்தூரில் சேகுவேரா புத்தகம் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சாத்தூர் கிளை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட, பாண்டியன் கிராம வங்கி தொழிற்சங்க இயக்கத்தின் முக்கிய தலைவர்களின் ஒருவரான தோழர்.சோலைமாணிக்கம் பெற்றுக்கொண்டார். பேரா. அ.மார்க்ஸ், கவிஞர் நந்தலாலா, எழுத்தாளர் மணிமாறன் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் மாதவராஜ் ஏற்புரை வழங்கினார். பாரதி புத்தகாலயத்தின் சார்பில் தோழர் நாகராஜன் கலந்து கொண்டார். கவிஞர் லட்சுமிகாந்தன் நிகழ்வை தொகுத்தளித்தார். காமிராக் கலைஞர் பிரியா கார்த்தி வீடியோ பதிவு செய்திருந்தார்.
இந்த புத்தகம் அமெரிக்க உளவுத்துறை குறிப்புகளின் பின்னணியில் எழுதப்பட்டது. இன்று வரை பேசப்படுகிற முக்கிய புத்தகமாயிருக்கிறது. இதுவரை 13 பதிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
Comments