க்ளிக் நாவல் வெளியீடு
- மாதவராஜ்
- Apr 18
- 1 min read
Updated: May 3

‘க்ளிக் ஆகிவிட்டது’, ‘க்ளிக் ஆகவில்லை’ என்பவை முக்கிய வார்த்தைப் பிரயோகங்களாகும் -, வாழ்க்கையே பிராஜக்ட்களாகும் – அழுத்தத்தை மீறி மனிதம் சட்டென்று எட்டிப் பார்த்து கைகோர்க்கும் அழகை காட்டுகிறது நாவல். ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாத மனித உறவுகளுக்குள் சஞ்சரிக்க வைக்கிறது.. தலைமுறைகளின் கால இடைவெளியை, நகரத்துக்கும் கிராமப்புறத்துக்கும் இருக்கும் தூரத்தை பேசுகிறது. சம கால ஆண் பெண் உறவுகளை ஒரு மேஜிக் ஷோ போல் நிகழ்த்தி காட்டுகிறது க்ளிக் நாவல்.
இணையத்தில் தொடராக வந்த எனது முதல் நாவலை க்ளிக். பாரதி புத்தகாலயம் வெளியிட்டது. நாவல் வெளியீடு 2023 ஜனவரி 7ம் தேதி சாத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.
தமுஎகச, சாத்தூர் கிளைத் தலைவர் தோழர் விஒஸ்வநாத தலைமை தாங்கினார். தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் லஷ்மிகாந்தன் நிகழ்வை தொகுத்தளித்தார். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட, சாத்தூரின் 10 இளைஞர்கள் பெற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச்செயலாளர் தோழர் அறம், எழுத்தாளர்கள் உதயசங்கர், மணிமாறன், முத்துலஷ்மி, உமர் பாருக், அண்டோ கால்பர்ட், சுமதி ஆகியோர் நாவல் குறித்த தங்கள் பார்வைகளை பகிர்ந்தனர்.
எழுத்தாளர் மாதவராஜ் ஏற்புரை வழங்க, ஆசிரியை காதம்பரி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
வெளியீட்டு விழாவின் காட்சிகள்
வெளியீட்டு நிகழ்வின் காணொலி
Comments