முதல் பாடம்
- மாதவராஜ்
- Jun 23
- 1 min read
Updated: Jun 27

இதற்கு முன்பும் சில சொற்சித்திரங்களை சின்னச் சின்ன வீடியோக்களாக்கி எனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தேன். நாம் நினைக்கும் காட்சிகளுக்கு ஏற்ப படங்களை இணையத்தில் தேடி, அவைகளை எடிட் செய்து வீடியோக்களாக்கிப் பார்த்திருந்தேன். தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் முயற்சிதான்.
இப்போது அதில் முன்னேற்றம். AIயிடம் ஸ்கிரிப்டைச் சொல்லி அதற்கேற்ப படங்களைப் பெற்று Shortsஆக யூடியூபில் வெளியிட்டு இருக்கிறேன். முதல் பாடம் என்னும் சொற்சித்திரம் இப்போது ஓளிச்சித்திரமாகி இருக்கிறது.
அடுத்து ஸ்கிரிப்ட்டிற்கு ஏற்ப நேரடியாக வீடியோவையே உருவாக்க வேண்டும்.
ஒன்று தெரிகிறது. AI ஐப் பார்த்து மிரளக் கூடாது. அதன் மீது உட்கார்ந்து சவாரி செய்ய வேண்டும்.
’முதல் பாடம்' youtube shorts கீழே இருக்கிறது.
எப்படியிருக்கிறது என பார்த்து சொல்லுங்கள் நண்பர்களே.
தொடருங்கள் தோழா
நல்ல தொடக்கம்...
பொன்ராஜ்