
மாதவராஜ்
அ றி மு க ம்

சொந்த ஊர் செங்குழி (திருச்செந்தூர் அருகே). வளர்ந்தது ஆறுமுகனேரி.
வசிப்பது சாத்தூர். வார்த்தது தொழிற்சங்கம்.
பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், பின்னர் தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியனில் பொதுச்செயலாளராகவும், முன்னணி பொறுப்பாளராகவும் 35 ஆண்டுகளாக செயல்பாடு.
இராஜகுமாரன் (மீனாட்சி புத்தகாலயம்), போதிநிலா (வம்சி பதிப்பகம்) என இரு சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இரண்டாம் இதயம் (பாரதி புத்தகாலயம்) அனுபவங்களின் தொகுப்பு வெளிவந்துள்ளது.
குருவிகள் பறந்து விட்டன என்னும் சொற்சித்திரங்களின் தொகுப்பு வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது
’சேகுவேரா - சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில்’, ’காந்தி புன்னகைக்கிறார், ஆதலினால் காதல் செய்வீர்’, ’என்றென்றும் மார்க்ஸ்’, ’மனிதர்கள் உலகங்கள் நாடுகள்’ போன்ற Non fiction புத்தகங்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
எழுதிய முதல் சிறுகதை மண்குடம் இலக்கிய சிந்தனை விருது பெற்றது
எழுதிய முதல் நாவல் ‘க்ளிக்’ - 2022ம் வருடத்தின் சிறந்த தமிழ் நாவல் என திருப்பூர் தமிழ்ச்சங்கம் தேர்ந்தெடுத்து விருது அளித்து கௌரவித்தது.
மேலும் எழுதிய, தொகுத்தபுத்தகங்கள் அமேசானில் வெளிவந்திருக்கின்றன.
’பள்ளம்’, ’இரவுகள் உடையும்’, ’இது வேறு இதிகாசம்’ ஆகிய ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
’இரவுகள் உடையும்’ திருவனந்தபுரத்தில் தேசீய அளவிலான ஆவணப்பட விழாவில் திரையிடப்பட்டது