

இருட்டு வெளிச்சம்
வலித்திருக்க வேண்டும். முனகிக்கொண்டான். காதில் பற்களை பதியவைத்த மூர்க்கம் பயம் தந்தது. விலகவும் மனம் கூடவில்லை. அபூர்வமான லயிப்பில் கரைந்து கொண்டிருந்தான். தைரியம் கூடி எதையும் இழந்துவிட சித்தமாக்கும் போதை தலைக்கேறி நின்றது. அம்மா சொன்ன கதையில் தங்கக் கோடாலி தரப் போகும் தேவதையாய் இவள் தெரிய ஆரம்பித்தாள்.
5
0


போதி நிலா
நிலாவுக்கு என்னைத் தெரியும். அப்பாவைத் தெரியும். தாத்தாவை தெரியும். தாத்தாவின் அப்பா, தாத்தாவின் தாத்தா என வழிவழியாய் எல்லோரையும் தெரியும். சரி. சுதிரையும், கவீஷையும் தெரியுமா? நிலா எங்கே பார்த்திருக்கப் போகிறது. ஸ்கூல் விட்டால் வீடு. வீடு விட்டால் ஸ்கூல். வீட்டில் புஸ்த்தகம், நோட்டு. அப்புறம் டி.வி தான் உலகம். உலகம் வீட்டிற்குள்ளேயே சுருங்கிப் போயிருக்கிறது.
1
0


மண்குடம்
பாவண்னனின் ‘முள்’ளும், வண்ணதாசனின் ‘தனுமை’யும் வந்திருந்த, அந்த வருடம் இலக்கியச் சிந்தனையினால் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் மண்குடமும் இடம்பெற்றிருந்தது. சுஜாதா தனது கணையாழியின் கடைசிப் பக்கத்தில் இந்தக் கதையைப் பாராட்டி எழுதியிருந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தன், இந்தக் கதையைப் படித்துவிட்டு கவிதை போலிருக்கிறது எனச் சொல்லி, முடிவை மட்டும் ரசிக்க முடியவில்லை என்று சொன்னதும் என் காதருகே கேட்டுக்கோண்டே இருக்கிறது....
2
0