பைத்தியங்களின் நாடு
- மாதவராஜ்
- Apr 4
- 1 min read

முன்பும் ஒரு நாடு இருந்தது.
பைத்தியமே அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தது.
பைத்தியங்கள் பைத்தியமற்றவர்களை பைத்தியங்கள் என அழைத்தார்கள்.
பைத்தியமற்றவர்கள் பைத்தியங்களை பைத்தியங்கள் என அழைத்தால் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பைத்தியங்கள் பைத்தியமற்றவர்கள் மீது கல்லெறிந்தனர்.
பைத்தியமற்றவர்கள் பைத்தியங்களை திருப்பித் தாக்கினால் அரசால் கொலை செய்யப்பட்டார்கள்.
பைத்தியங்களின் கைகளில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
பைத்தியமற்றவர்களுக்கு ஒரே ஒருநாள் மொத்தமாய் பைத்தியம் பிடித்தது.
பிறகு அந்த நாட்டில் பைத்தியங்களே இல்லாமல் போனார்கள்
Comments