எண்களின் உலகம்
- மாதவராஜ்
- May 3
- 1 min read

அவனது அரையும்
அவளது அரையும்
சேர்ந்த ஒன்றை
எண்களின் உலகத்தில் தவழவிட்டார்கள்
போன் நம்பர்
ஆதார் கார்டு
ஏ.டி.எம் கார்டு
பான் கார்டு
கஸ்டமர் ஐ.டி
இவைகளோடு
வேறென்ன எண்களையெல்லாம்
அதற்கு சூட்டுவது என
உலகம் யோசித்துக் கொண்டிருந்தது
பேரைச் சூட்டிய தாத்தாவுக்கு
முகமே நினைவிலிருந்தது!
Comments