top of page
மாதவராஜ்



மீளுரு - மணல் மகுடி குழுவின் நாடகம்!
இறந்தவர்கள் தங்களுக்காக காத்திருக்கும் மனிதர்களை சந்திக்கிறார்கள். எப்படி போரில் கொல்லப்பட்டோம் என்பதை சொல்கிறார்கள். ஒவ்வொன்றும் உக்கிரமானவை. கொல்லப்பட்ட தன் உடம்பின் மீது ஒரு பெண்ணின் தலை மட்டும் விழுந்ததாகவும், பின்னர் வெட்டுப்பட்ட ஆணின் கால்கள் விழுந்ததாகவும், அடுத்து காகிதத்தை இறுகப் பற்றியிருந்த வயதானவரின் கைகளும் விழுந்து கொண்டிருந்ததாய் ஒருவன் சொல்கிறான்.கவிதையை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது குண்டுகளால் கொல்லப்பட்டதாகவும், அந்தக் கவிதையை எழுதிக் கொண்டிருப்பதாகவும்


"மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்”
கரிசல்குயில் கிருஷ்ணசாமி காலமாவதற்கு சில நாட்கள் முன்பு கவிஞர் இன்குலாப் கவிதையினை மெட்டமைத்துப் பாடியிருந்திருக்கிறார். அதனை கவிஞர் லஷ்மிகாந்தன் அரங்கத்தில் ஒலிபரப்பினார். அமைதி கொண்ட அரங்கத்தில் கிருஷ்ணசாமி “மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்” என எப்போதும் போல் பாட ஆரம்பித்தார். எப்போதையும் விட அந்தக் குரல் பெரும் தவிப்பும், உயிர்ப்பும் மிக்கதாய் இருந்தது.


க்ளிக் நாவல் வெளியீடு
ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாத மனித உறவுகளுக்குள் சஞ்சரிக்க வைக்கிறது.. தலைமுறைகளின் கால இடைவெளியை, நகரத்துக்கும் கிராமப்புறத்துக்கும் இருக்கும் தூரத்தை பேசுகிறது. சம கால ஆண் பெண் உறவுகளை ஒரு மேஜிக் ஷோ போல் நிகழ்த்தி காட்டுகிறது க்ளிக் நாவல்.


சேகுவேரா புத்தக வெளியீடு
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட தோழர் சோலைமாணிக்கம் பெற்றுக் கொள்கிறார். கவிஞர் நந்தலாலா, பேரா.அ.மார்க்ஸ், எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள், எழுத்தாளர் மணிமாறன் ஆகியோர் உடனிருக்கின்றனர்.


இராஜகுமாரன் - வெளியீடு
இராஜகுமாரன் சிறுகதை தொகுப்பை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டிருந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்னுரை எழுதியிருந்தார்.அந்த புத்தகத்திற்கும் எனக்கும் கிடைத்த மிகப் பெரிய பேறு அது.
bottom of page