top of page

சாலை



பாம்புகள் அசையாதிருக்கும்

வெறும் தோலாய் மட்டும் 

 

குறுக்கே பாய்ந்த நாய்கள்

குடல் சிதறிக் கிடக்கும்

 

எதோவொரு வாகனம்

சிந்திச் சென்ற   

சில தானியங்களுக்காக

காடைகளும் மைனாக்களும்

இறக்கைகள் பிய்ந்து

எச்சம் போல ஒட்டியிருக்கும்

 

சிறகுகள் மட்டும் விரிந்திருக்க

சிலுவையில் அறையப்பட்ட ஏசுக்களாய்

ஓராயிரம் வண்ணத்துப் பூச்சிகள்

உற்றுப்பார்த்தால் தெரிகின்றன

 

சக்கரங்கள் உருண்டோடும்

இந்தச் சாலை வழியேதான்

காலத்தை நாம்

கடந்து கொண்டே இருக்கிறோம்!


1 commentaire


Invité
22 mai

நன்று

J'aime

Subscribe செய்யுங்கள். தொடர்பிலிருப்போம்!

bottom of page