top of page

பறவை மாடு



காகமோ  கொக்கோ

கருங்குருவியோ

பறவைகள் வந்து

உரிமையோடு

முதுகில் அமர்கின்றன

 

சாவகாசமாய் காற்றில்

சிறகுகளை சரிபார்க்கின்றன

அசையாமல் அப்படியே

இளைப்பாறுகின்றன

 

தோலைச் சுண்டி

வாலைச் சுழற்றி

ஈக்களையும்

கொசுக்களையும் போல

எரிச்சலில் விரட்டுவதும் இல்லை

 

கழுத்தைத் திருப்பி

நாக்கை நீட்டி

ஆசையுடன் வருடுவதும் இல்லை  

 

மாடுகள் அவை பாட்டுக்கு

வெட்ட வெளியில்

மேய்ந்து கொண்டிருக்கின்றன

சமாதானமாய் உட்கார்ந்து

அசைபோட்டுக் கொண்டிருக்கின்றன

 

பறவைகளிடம்  மாடுகளும்

மாடுகளிடம் பறவைகளும்

தங்களைக் கொடுத்து விடுகின்றன

அப்படியே.

Comentários


Subscribe செய்யுங்கள். தொடர்பிலிருப்போம்!

bottom of page