top of page
மாதவராஜ்



தடை செய்யப்பட்ட நாவல்கள் - 6
1970களில் வாய் மொழியாக சக கைதிகளிடம் 'பூமி மனுஷ்யா' என்னும் இந்தக் கதையை சொல்லியிருக்கிறார். எழுதுவதற்கு காகிதங்கள் கூட தரப்படவில்லை. கழிவுக் காகிதங்களை சேகரித்து எழுதுகிறார். 1979ல் விடுதலை செய்யப்படுகிறார். 1980ல் நாவல் அச்சிடப்பட்டு வெளிவருகிறது. உடனடியாக அந்தப் புத்தகம் இந்தோனேசியாவில் ஜெனரல் சுகர்ட்டோ அரசால் தடை செய்யப்பட்டது. தோயர் பதினெட்டு வருடங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்படுகிறார்.
Apr 273 min read


தடை செய்யப்பட்ட நாவல்கள் - 5
மரணத்தை எதிர்பார்த்திருக்கும் மனிதனின் கண்கள் எதையெல்லாமோ சொல்லிக் கொண்டே இருக்கிறது. அவனுக்கான இறுதி மணி அடிக்கப்பட்டுவிட்டது என்பது புரிகிறபோது, வாகனுக்குள்ளும் அந்த ஓசை கேட்டு சலனப்படுத்துகிறது. கதை முடிந்த பிறகும் அது ரீங்காரமிடுகிறது. இழப்பைத் தவிர வேறு எதையும் போர் மூலம் பெற முடியாது என்பதை உணர்த்தியபடி இருக்கிறது.
Apr 276 min read


தடை செய்யப்பட்ட நாவல்கள் - 4
பிரெஞ்சு சமூக அமைப்பையும், கிறித்துவ வறட்டுத்தனங்களையும், நேர்மையற்ற நீதித்துறையையும் கடுமையாகச் சாடிய கருத்துக்கள் நாடு விட்டு நாடு அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. சிறைகள் அவருக்காக எப்போதும் வாயைப் பிளந்தபடி காத்துக் கொண்டிருந்தன. பாரிஸிலிருந்து, இங்கிலாந்துக்கு, திரும்பவும் பாரிஸுக்கு, அங்கிருந்து பெர்லினுக்கு, பிறகு ஜெனிவாவுக்கு என நகர்ந்தபடி இருந்தார். தான் ஓடிய அந்தக் கால்களைத்தான் தன் நாவலின் கதாநாயகனுக்கும் வால்டர் கொடுத்திருக்க வேண்டும்.
Apr 275 min read


தடை செய்யப்பட்ட நாவல்கள் - 3
நாகரீகமற்றவர்கள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும் கருதப்படுபவர்களிடம் இருக்கும் தாய்மையின் ஒளியை அந்த எழுத்துக்களில் தரிசிக்க முடிகிறது. இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்கள் கொடுப்பதற்கு உயிரின் துளிகளைப் போல அபூர்வமானதை வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறது. உலகைக் காப்பாற்றும் சக்தி அந்த எளிய மனிதர்களிடம் இருப்பதைக் காட்டுகிறது. உயிரோடு இருப்பவர்களைக் கொல்லும் ஒரு அமைப்பையும், செத்துக் கொண்டிருப்பவனுக்கு உயிர் கொடுக்கும் ஒரு தாயையும் தராசில் நிறுத்தி சமூகத்திடம் கேள்வி கேட்கிறது
Apr 276 min read


தடை செய்யப்பட்ட நாவல்கள் - 2
அது மார்க் ட்வைன் எழுதிய Adventures of Huckklebery finn. அதற்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு புத்தகம் வரவில்லை' என்று எழுத்தாளர் எர்னஸ்டோ ஹெம்மிங்வே 1935ல் எழுதுகிறார். அமெரிக்காவின் மதிப்பு மிக்க கன்கார்டு நூலகமோ "மூர்க்கத்தனத்தையும், அநாகரீகத்தையும் பேசும் இந்த புத்தகம் சேரிகளுக்குத்தான் லாயக்கு. அறிவும் மரியாதையும் மிக்க மனிதர்களுக்கு ஏற்புடையதல்ல" என்று இந்த நாவல் வெளிவந்த 1885ம் ஆண்டிலேயே தடைசெய்தது.
Apr 275 min read


தடை செய்யப்பட்ட நாவல்கள் -1
போர்முனையில் குண்டுகளின் சத்தங்களோடும், குதிரைகளின் குளம்படி சத்தங்களோடும் நான்கு வருடங்கள் கழிகின்றன. 1918ல் போர் முடிவடைகிறது. தனது ஊருக்குத் திரும்புகிறார். வெறுமையும், இழப்புகளும் அலைக்கழிக்கின்றன. முடிந்த வாழ்க்கை விரட்டுகிறது. இறந்துபோன நண்பர்களின் முச்சுக்காற்று இரவுகளில் அருகில் கேட்கிறது. கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு போர் கொடுமையாக இருப்பதை உணர்கிறார். போரைப்பற்றி சிந்திப்பதை நிறுத்த எவ்வளவு முயற்சி செய்தாலும் அது கருநிழலாய் அவர் தலைக்கு மேல் தொங்கியபடி சித்திரவதை
Apr 276 min read


தடை செய்யப்பட்ட நாவல்கள்
எல்லாம் அதிகாரத்தின் பேரிலேயே நடந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. ஆனால் இந்த இலக்கியங்கள் அந்த தடைகளை மீறி மக்களை நெருங்கிவிடுவதுதான் சுவராஸ்யம். தொடர்ந்து அதிகார அமைப்புகள் தோற்றுப்போகிற இடமாக இலக்கியமே இருக்கிறது. இலக்கியம், எழுத்து என்பது காற்று போல சுதந்திர தாகம் இயல்பிலேயே கொண்டது. காற்றுக்கு வேலி கட்ட முடியாது.
Apr 271 min read
bottom of page